தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்
வானிலை நிலவரம்
Published on

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனத்தினால் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவிடைமருதூர் மற்றும் அரியலூரில் தலா 15 செமீ மழை பெய்துள்ளது. கும்பகோணத்தில் 12 செமீ, அரூரில் 11 செமீ மழை பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com