வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட் உத்தரவு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் வந்ததால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட் உத்தரவு
Published on

டெல்லி திமார்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ. பங்கஜ் புஷ்கர். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவருக்கு வாட்ஸ் அப் மூலம்  தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளது. அவரையும், அவரது மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதுபற்றி திமார்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் திருப்தி இல்லாத நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் வருவதால், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எல்.ஏ சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com