திருப்பதி: காணிக்கை செலுத்தப்பட்ட 14 ஆயிரம் கிலோ முடி ரூ. 11 கோடிக்கு ஏலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 14 ஆயிரம் கிலோ முடி ரூ. 11.24 கோடிக்கு ஏலம் போனது.
திருப்பதி: காணிக்கை செலுத்தப்பட்ட 14 ஆயிரம் கிலோ முடி ரூ. 11 கோடிக்கு ஏலம்
Published on

இந்தியாவின் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் திகழ்ந்து வருகிறார். திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்கதர்கள் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்கள் தங்களது முடியை காணிக்கை செலுத்துகிறார்கள்.

அப்படி காணிக்கை செலுத்திய முடி, இணைய தளம் மூலமாக ஏலம் விடப்பட்டது. அதில் 13 ஆயிரத்து 90 கிலோ எடையுள்ள முடி 11 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

இந்த ஏலம் திருப்பதி கோவிலின் இணை நிர்வாக அதிகாரி கே.எஸ். ஸ்ரீனிவாசா ராஜூ தலைமையின் கீழ் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com