கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பலி

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக பள்ளத்தில் விழுந்த விபத்தில் கொத்தனார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பலி
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த ராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது28) கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி அயநல்லூர் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அயநல்லூர் அருகே வரும் போது சாலையில் இருந்த பள்ளத்தில் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வாலிபர் மணிகண்டனை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com