கிண்டி அருகே உணவக ஊழியரை தாக்கி பணம் பறிப்பு

கிண்டி அருகே உணவக ஊழியரை தாக்கி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் பறிப்பு
பணம் பறிப்பு
Published on

போரூர்:

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் சிவா. இவர் எம்.ஜி.ஆர். நகர் பாரதிதாசன் காலனியில் தங்கி கிண்டியில் உள்ள “பாஸ்ட்புட்” கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிவாவை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து ரூ. 600 பணத்துடன் மணிபர்சை பறித்து தப்பி சென்றனர். அதிர்ச்சி அடைந்த சிவா கூச்சலிட்டார்.

அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பூவரசி, போலீஸ்காரர் அகஸ்டின் ஆகியோர் ஒருவனைமடக்கி பிடித்து கைது செய்தனர். அவன் சைதாப்பேட்டையைச்சேர்ந்த அரவிந்த் என்பது தெரிந்தது. தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com