குறைகேட்பு கூட்டத்தின் போது செல்போனில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு நடந்த குறைகேட்பு கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி யூடியூப்பில் சமையல் குறிப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செல்போனில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி
செல்போனில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி
Published on

கடலூர் :

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி ஒருவரும் வந்திருந்தார்.

அவர் கூட்டம் தொடங்கியதில் இருந்தே, பொதுமக்கள் கூறிய கோரிக்கைகள் பற்றி கவனிக்காமல் தனது செல்போனிலேயே மூழ்கியிருந்தார். அப்போது அவர் யூடியூப்பில் சமையல் குறிப்பு தொடர்பான வீடியோக்களை குறைகேட்பு கூட்டம் முடியும் வரை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த பிற அதிகாரிகள் மற்றும் மனு அளிக்க வந்த பொதுமக்கள், பெண் அதிகாரியே கூட்டத்தை கவனிக்காமல் சமையல் குறிப்பு பார்த்ததை கண்டு புலம்பினர்.

இதற்கிடையே பெண் அதிகாரி, செல்போனில் சமையல் குறிப்பு பார்த்துக்கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com