நாடாளுமன்ற தேர்தல் முடிவு - கிரீஸ் நாட்டில் எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது

கிரீஸ் நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவி ஏற்கிறார்.
கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்
கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்
Published on

ஏதன்ஸ்:

கிரீஸ் நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் அலெக்சிஸ் திசிப்ராஸ் தலைமையிலான இடதுசாரி சிரிசா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் ஆட்சிக்காலம் முடிந்ததால், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதன் முடிவுகள் நேற்று வெளிவரத் தொடங்கின.

மொத்தம் உள்ள 300 தொகுதிகளில், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் கட்சிக்கு சுமார் 90 இடங்களே கிடைத்தன. பிரதமர் அலெக்சிஸ் திசிப்ராஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

கன்சர்வேடிவ் கட்சி தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், பிரதமராக பதவி ஏற்கிறார். “கிரீஸ் நாட்டை மாற்ற நான் ஆதரவு கோரினேன். அதற்கு நீங்கள் தாராளமாக ஆதரவு அளித்துள்ளர்கள்” என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com