சுவாமிமலை அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்

சுவாமிமலை அருகே தோழியை பார்க்க சென்ற பட்டதாரி பெண் திடீரென மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

சுவாமிமலை:

சுவாமிமலை அடுத்த மாங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் கமலா. இவரது மகள் ரம்யா (வயது 24) பொறியியல் பட்டதாரி. இவர் கடந்த 1-ந் தேதி தனது தோழியை பார்க்க கும்பகோணம் சென்றனர். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இதுபற்றி கமலா சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை யாரும் கடத்தி சென்றார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com