திருக்கனூர் அருகே பட்டதாரி பெண் மாயம்

திருக்கனூர் அருகே தாயிடம் புதுவைக்கு செல்வதாக கூறி சென்ற பட்டதாரி பெண் மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாயம்
மாயம்
Published on

புதுச்சேரி:

 திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் குமாரவேலு. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் மாலதி (வயது21) இவர் பி.ஏ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குமாரவேலு இறந்து விட்டதால் மகேஸ்வரி கூலிவேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று காலை மாலதி தனது தாயிடம் புதுவைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு மாலதி வீடு திரும்பவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் மாலதி இல்லை. இதையடுத்து மகேஸ்வரி மனது மகள் மாயமானது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாலதியை தேடி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com