

புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் மீது சி.பி.ஐ. வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இது நிலுவையில் உள்ள நிலையில் அவர் வெளிநாடு செல்லாமல் இருக்க தேடப்படும் நபராக அறிவித்து மத்திய அரசு கடந்த மாதம் 18-ந் தேதி உத்தரவிட்டது.
அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டின் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேரில் ஆஜராகி இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை இன்றே விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.