முதுகுளத்தூரில் வயலில் கிடந்த மின் வயரில் சிக்கி 2 ஆடுகள் உயிரிழப்பு

முதுகுளத்தூரில் வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் வயரில் சிக்கி, மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகள் பலியானது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் பகுதியில் சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாய நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், ரோட்டோரங்களில் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவரது ஆடுகள் மேய்ச்சலுக்காக அருகேயுள்ள பருக்கைக்குடி பகுதிகளில் உள்ள நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது வயல்வெளியில் அறுந்து கிடந்த உயரழுத்த மின் வயரில் சிக்கிய 2 ஆடுகள் மின்சாரம் தாக்கி பலியானது.

பருவமழை பெய்தபோதிலும், உழவு பணிக்காக இந்த பகுதியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தால், விவசாயிகளும், உழவு பணிகளை மேற்கொள்ளும் டிராக்டர் வாகனமும், அறுந்து கிடந்த மின்வயரில் சிக்கி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com