பாலில் கலப்பட விவகாரம்: அமைச்சர் தெளிவான பதில் அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

பாலில் கலப்படம் தொடர்பாக எழுந்துள்ள புகாருக்கு அமைச்சர் தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் கூறினார்.
பாலில் கலப்பட விவகாரம்: அமைச்சர் தெளிவான பதில் அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
Published on

அவனியாபுரம்:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளிக்கும் போது பாலில் கலப்படம் குறித்து தெளிவற்ற தகவல்களை கூறி வருகிறார்.

பால் அத்தியாவசிய பொருள். எனவே மக்கள் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் தெளிவான கருத்தை அவர் தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழக அரசும் இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com