துடியலூர் சிறுமி கொலை: கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு

கோவை துடியலூர் சிறுமி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். #GirlHarassment
துடியலூர் சிறுமி கொலை: கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு
Published on

கோவை:

கோவை துடியலூரில் கடந்த 25-ந்தேதி மாயமான 7 வயது சிறுமி அடுத்த நாள் வீட்டருகே பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தொண்டாமுத்தூர் உளியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) என்ற வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோவை கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் சந்தோஷ் குமாரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வோம்.

அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளோம்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தோஷ்குமார் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். #GirlHarassment

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com