கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி கைது

கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி கைது
Published on

கோவை:

கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 61).

மளிகை கடை நடத்தி வரும் இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாகவும் உள்ளார்.

சம்பவத்தன்று அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தண்டபாணியின் கடைக்கு சாக்லெட் வாங்க சென்றார். அப்போது தண்டபாணி சிறுமியிடம் நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி வலியால் துடித்து அலறியபடி வெளியே ஓடினார்.

மறுநாள் பள்ளியில் வைத்து சிறுமி வலியால் துடித்ததை பார்த்த ஆசிரியை அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை சிறுமி கூறினார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு விவரங்களை கூறினர். பின்னர் சிறுமியை சிகிச்சைக்காக கேரளாவுக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவரது உறவினர் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதுகுறித்து அவர்கள் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயாரிடம் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் விசாரணை நடத்தினார். மேலும், அவர் அளித்த புகாரின்பேரில் தண்டபாணியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டத்தின் (போக்கோ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com