ஆழ்வார்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- அ.தி.மு.க. பிரமுகர் கைது

ஆழ்வார்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
ஆழ்வார்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- அ.தி.மு.க. பிரமுகர் கைது
Published on

ஆழ்வார்குறிச்சி:

ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 50) அ.தி.மு.க. பிரமுகர். அதே பகுதியில் 11 வயது சிறுமி  பெற்றோருடன் வசித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் கடைக்கு சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்டவர் சிறுமியின் வீட்டிற்கு சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இது சம்பந்தமாக சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி விசாரணை நடத்தி நேற்று அருணாச்சலத்தை கைது செய்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com