சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்- தொழிலாளி கைது

நெல்லை அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்டிட தொழிலாளியை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தில் 42 வயது மதிக்கத்தக்க கட்டிட தொழிலாளி ஒருவருக்கும், 14 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த திருமணம் அந்த சிறுமியின் வீட்டில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் விருப்பம் இல்லாத அந்த சிறுமி வீட்டை விட்டு தப்பி ஓடினார்.

பின்னர் அவர், முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தகவல் அறிந்த நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்த் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்டிட தொழிலாளியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com