சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கண்ணாண்டி விளை கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் பாக்கியராஜ் (வயது 35), கட்டிட தொழிலாளி. கடந்த 7.4.2016 அன்று 14 வயது சிறுமி ஒருவர் டியூசனுக்கு சென்றபோது, அங்கு வந்த பாக்கியராஜ், சிறுமியை காட்டுப்பகுதிக்குள் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பாக்கியராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி குமார் சரவணன் வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட பாக்கியராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com