இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு

காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு இன்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிரிஷ் மர்மு
கிரிஷ் மர்மு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து அக்டோபர் 31 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு முதல் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு நியமணம் செய்யப்பட்டார்.

குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான மர்மு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப்பின் காஷ்மீருக்கு மத்திய அரசால் நியமணம் செய்யப்பட்ட முதல் ஆளுநர் ஆவார்.

இதற்கிடையில், 9 மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் கவர்னராக செயல்பட்டுவந்த கிரிஷ் மர்மு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் 1 ஆண்டு நிறைவடைந்திருந்த நிலையில் மர்மு தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உயர்பதவி கிடைக்க வாய்ப்பு இருந்ததால் மர்மு தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் வரவு,செலவு கணக்குகளை சரிபார்க்கும் இந்திய அரசின் மிக முக்கிய பொறுப்பான தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக கிரிஷ் சந்திரா மர்மு இன்று நியமணம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லி ராஷ்டிரபதிபவனில் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

குடியரசுத்தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய தலைமை கணக்குத்தணிக்கையாளர் பதவியை வகிப்பவரை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது.

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான அதிகார உரிமையை இந்திய தலைமை கணக்குத்தணிக்கையாளர் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com