ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்

ஜெர்மெனியில் 2 போர் விமானங்கள் பயிற்சியின் போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்
Published on

பெர்லின்:

ஜெர்மெனி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மூன்று யூரோ போர் விமானங்கள் அந்நாட்டின் பிளீசென்சி பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதின. மோதிய சில வினாடிகளில் விமானங்கள் கட்டுப்பாட்டினை இழந்து, மியூரிட்ஸ் ஏரி அருகில் விழுந்து நொறுங்கின. 

ஆனால் விமானங்கள் தரையை நெருங்குவதற்குள், விமானங்களில் இருந்த இரண்டு விமானிகளும் 'பாராசூட்’ உதவியுடன் வெளியே குதித்தனர். 

இந்த விபத்தினை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு போர் விமானத்தின் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், ஒரு விமானியை உயிருடன் மீட்டனர். மற்றொரு விமானியை தேடி வருகின்றனர். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com