துப்பாக்கி சுடுதல்: வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சமமான வாய்ப்பு

துப்பாக்கி சுடுதல் போட்டியில் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சமமான வாய்ப்பு கொடுக்கும் வகையில் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதல்: வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சமமான வாய்ப்பு
Published on

இதுகுறித்து சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாடு பெடரேசன் நிர்வாகக் கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. கவுன்சில் கூட்ட முடிவில் வீராங்கனைகளுக்கான ஷாட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.

2020-ம் அண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படைக்கு முன்னோட்டமாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

10 மீட்டர் ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் பிரிவில் 40 ஷாட்டுகளில் இருந்து 60 ஷாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 மீட்டர், 300 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் பிரிவில் 3X20 ஷாட்ஸ் 3X40 ஷாட்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான ட்ரப் அண்டு ஸ்கீட் பிரிவில் 75 டார்கெட்ஸ் 125 டார்க்கெட்ஸ்-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான ரன்னிங் டார்கெட்ஸ் பிரிவில் 40 ஷாட்ஸ் 60 ஷாட்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com