ஆயிரம் விளக்கில் ‘கியாஸ்’ கசிந்து உடல் கருகிய கணவன்-மனைவி பலி

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கியாஸ் கசிந்து உடல் கருகிய கணவன், மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மரணம்
மரணம்
Published on

சென்னை:

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தம்பதிகளான சுனில் சர்தார் (54). அவரது மனைவி கிருஷ்ண சர்தார்(48) ஆகியோர் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

இருவரும் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தனர். அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ண சர்தார், சுனில் சர்தார் ஆகிய இருவரும் உடல் கருகிய நிலையில் தங்கியிருந்த அறையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

ஆயிரம் விளக்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சுனில் சர்தாரும், கிருஷ்ண சர்தாரும் பரிதாபமாக இறந்தனர். சமையல் செய்த போது கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் 2 பேரும் உடல் கருகியது விசாரணையில் தெரிந்தது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com