சாம்சங் கேலக்ஸி நோட் 8: வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டு பின் திரும்ப பெற்ற கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களின் அடுத்த மாடல் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 8: வெளியீடு மற்றும் முழு தகவல்கள்
Published on

புதுடெல்லி:

சாம்சங் நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைமை அதிகாரி டி.ஜெ. கோ ஜனவரி மாதம் வெளியிட்ட தகவலில் அந்நிறுவனம் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் முதல் காலாண்டு வர்த்தக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் படி சாம்சங் கேல்கஸி நோட் 8 ஸ்மார்ட்போன் 2017-இன் பிற்பாதியில் வெளியாகலாம் என தெரியவந்துள்ளது. 

மார்ச் 31-ந்தேதியுடனான காலண்டு முடிவுகளை சாம்சங் தனி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டின் பிற்பாதியில் புதிய ஸ்மார்ட்போன் வெளியாவது குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இது சாம்சங் நோட் சீரிஸ் போன்களின் வெளியீட்டை மேலும் உறுதி செய்துள்ளது. 

முன்னதாக அந்நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி நோட் 5, ஆகஸ்டு 2015, கேலக்ஸி நோட் 7 ஆகஸ்டு 2016 வெளியிடப்பட்டதால் கேலக்ஸி நோட் 8 இந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கடந்த ஆண்டு சாம்சங் வெளிட்ட கேலக்ஸி நோட் 7 வெற்றி பெறாத நிலையில், இந்த ஆண்டின் நோட் சீரிஸ் போன் வெளியீட்டை அவசரப்படுத்தாது என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நோட் 7 சந்தித்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் சாதனத்தை பாதுகாப்பாக வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் ஐபோன் வெளியீட்டிற்கு சற்று முன்னர் சாம்சங் நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு பின் அவற்றை விற்பனை செய்யும். இதனால் கேலக்ஸி நோட் 7 ஏற்படுத்திய பாதிப்பினை தொடர்ந்து புதிய நோட் ஸ்மார்ட்போனினை அவசரமாக வெளியிடாது என கூறப்படுகிறது. 

இதனிடையே சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 சாதனத்தை மேம்படுத்தி முந்தைய பதிப்பை விட குறைந்த அளவு பேட்டரி திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com