கமுதி ஆயுதப்படைக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளுன் கூடிய பழத்தோட்டம்: டி.ஐ.ஜி. திறந்து வைத்தார்

கமுதி அருகே கோட்டை மேட்டில் ஆயுதப் படைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளுடன் கூடிய பழத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதை ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் திறந்து வைத்தார்.
கமுதி ஆயுதப்படைக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகளுன் கூடிய பழத்தோட்டம்: டி.ஐ.ஜி. திறந்து வைத்தார்
Published on

கமுதி:

கமுதி ஆயுதப்படைக்கு சொந்தமான 20 ஏக்கர் பயன்பாடு இல்லாமல் இருந்தது. அந்த நிலத்தினை பயனுள்ளதாக மாற்ற வேண்டி 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த 3 மாதத்தில் மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, தென்னை, நெல்லி, முருங்கை, முந்திரி, எலுமிச்சை, தேக்கு, செம்மரம், மலைவேம்பு ஆகிய மரச்செடிகள் மொத்தம் 12,500 நடவு செய்யப்பட்டது. 110 அடியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அனைத்து செடிகளுக்கும் சொட்டுநீர் பாசம் அமைத்து பராமரிக்கப்படுகிறது.

மேலும் செடிகள் பராமரிப்பு, பழங்கள் விற்பனை மற்றும் வேலை ஆட்கள் செலவு குறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி விதி முறைகள் வகுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் சூப்பிரண்டு இன்பமணி, உதவி சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com