

பாரீஸ்:
பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரன் பதவி வகிக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
இவர் தான் அதிபராக பதவி ஏற்ற 3 மாதத்தில் தனது மேக்-அப் அதாவது ஒப்பனைக்காக ரூ.20 லட்சம் வரை செலவு செய்துள்ளார். இதை அதிபர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
இது பிரான்சில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் மேக்ரன் மிக குறைந்த செலவில் மேக்-அப் செய்து கொள்ள வேண்டும் என்றும், தற்காலிகமாக வாடகை அடிப்படையில் மேக்-அப் மேனை பயன்படுத்தி அதன் மூலம் செலவை குறைக்கலாம் என்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இருந்த போதிலும் இவருக்கு முன்பு அதிபர் பதவி வகித்த பிரான்ஸ்கோயிஸ் ஹோலன்டேவை விட இவரது மேக்-அப் செலவு குறைவுதான் என்ற கருத்தும் நிலவுகிறது.