டெல்லியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் - 4 வாலிபர்கள் கைது

டெல்லியில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

புதுடெல்லி:

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. டி.வி. மற்றும் ஆன்லைனில் மட்டுமே போட்டிகளை காண முடியும்.

இதற்கிடையே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மூலம் தலைநகர் டெல்லியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. உடனே தென்கிழக்கு டெல்லியின் நேரு என்கிளேவ் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 8 செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ரூ.93 ஆயிரம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, மேலும் 50 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com