கரூர் அருகே மரத்தில் கார் மோதி 4 பேர் பலி

கரூர் அருகே சாலையோரம் இருந்த புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
கரூர் அருகே மரத்தில் கார் மோதி 4 பேர் பலி
Published on

கரூர்:

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவருடைய முதல் மனைவி கிரேசி ஜெயலட்சுமி (55), 2-வது மனைவி சுப்புலட்சுமி (53), டிரைவர் முனியாண்டி (65). இவர்கள் 4 பேரும் ஒரு காரில் நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

கரூர் அருகே சின்னதாராபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் செல்வராஜூம், முனியாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காரின் இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிய கிரேசி ஜெயலட்சுமியையும், சுப்புலட்சுமியையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். விபத்தில் பலியான செல்வராஜ் கிராமப்புற வளர்ச்சி துறை இணை இயக்குனராகவும், முனியாண்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கார் டிரைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com