கர்நாடகாவில் கார்-லாரி பயங்கர மோதல்: 4 பேர் பலி

கர்நாடகாவில் காரின் டயர் வெடித்து எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர்-புனே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இரண்டு குழந்தைகள் உள்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்தனர்.

கஞ்சிகனல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காரின் முன்புற டயர் திடீரென வெடித்தது. இதனால் ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஏதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பெண்கள் உள்பட மொத்தம் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com