புதுச்சேரி மதுபானங்களை தமிழக மதுபானங்களாக மாற்றி விற்பனை- 4 பேர் கைது

புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை தமிழக மதுபானங்களாக மாற்றி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
கைது நடவடிக்கை
Published on

மன்னார்குடி பகுதியில் போலி மதுபானங்கள் பார்களில் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீசார் பார்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை கண்காணித்தனர்.

அப்போது, புதுச்சேரியில் தயாரிக்கப்படும் மதுபானங்களை வாங்கி வந்து, தமிழக மதுபாட்டில்களில் நிரப்பி டாஸ்மாக் மதுபானம் போன்று மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com