முன்னாள் நிதி செயலாளர் ராஜிவ் குமார் தேர்தல் ஆணையராக நியமனம்

இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ராஜினாமா செய்துள்ள நிலையில், முன்னாள் நிதி செயலாளர் ராஜிவ் குமார் அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிவ் குமார்
ராஜிவ் குமார்
Published on: 

இந்திய தேர்தல் கமிஷனில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா. இவரது பதவி காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இந்த நிலையில், அசோக் லவாசா கடந்த மாதம் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அந்த புதிய பதவியை ஏற்பதற்காக அசோக் லவாசா தேர்தல் கமிஷனர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ள அவர், வருகிற 31-ந்தேதியுடன் தன்னை பதவியில் இருந்த விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் நிதி செயலாளர் ராஜிவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com