சத்தீஸ்கர் முன்னாள் முதல் மந்திரி அஜித் ஜோகி மருத்துவமனையில் அனுமதி

சத்தீஸ்கர் முன்னாள் முதல் மந்திரி அஜித் ஜோகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அஜித் ஜோகி
அஜித் ஜோகி
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் அஜித் ஜோகி (74). ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை தொடங்கிய இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பிரச்சினை உள்ளதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com