

நெல்லை:
நாங்குநேரி தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று நாங்குநேரி அருகே உள்ள பட்டப்பிள்ளை புதூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிலர் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.65 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.