திருச்செந்தூரில் பூ வியாபாரி தற்கொலை

திருச்செந்தூரில் மது குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூரில் பூ வியாபாரி தற்கொலை
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் முத்து நகரைச்சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). பூ வியாபாரியான இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. கடந்த 6 மாதமாக மது குடிக்கவில்லையாம். 

இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக மது குடிக்க ஆரம்பித்துள்ளார். இதை இவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று தனியறையில் படுக்க சென்றுள்ளார். நேற்று காலையில் வெகு நேரமாக கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாரியப்பன் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்த திருச்செந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com