தா.பேட்டையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

வீட்டின் மொட்டை மாடியில் உட்கார்ந்திருந்த வாலிபர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.
தா.பேட்டையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

தா.பேட்டை

தா.பேட்டை சாராய காரர் தெருவில் வசித்து வந்தவர் கருணாகரன் (35). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 10-ம் தேதி இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தடுப்பு சுவர் மீது உட்கார்ந்திருந்த கருணாகரன் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. 

இதையடுத்து படுகாயமடைந்த கருணாகரனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கருணாகரன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். 

சம்பவம் குறித்து உறவினர் ஜெஸிதா.பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் முருகானந்தம் வழக்குபதிந்து பிரேதத்தை கைப்பற்றி திருச்சி அரசுமருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com