

புதுடெல்லி:
இந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்டில் பிக் 10 சேல் நடைபெற்று வருகிறது. மே 14-ந்தேதி துவங்கிய சிறப்பு விற்பனை 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் பிளிப்கார்ட் தனது பொருட்களுக்கு சிறப்பு விலை, தள்ளுபடி மற்றும் இதர சலுகைகளை அறிவித்து வழங்கி வருகிறது.
அதன்படி பிளிப்கார்ட் பிக் 10 சிறப்பு விற்பனையில் இன்று ஐபோன் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்ச தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐபோன்களுக்கு அதிகபட்சம் ரூ.19,001 மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ.14,490 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்:
128 ஜிபி ஆப்பிள் ஐபோன் 7 ரூ.19,001 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.50,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
ஐபோன் 7 சிறப்பம்சங்கள் -
* 64-பிட் A10 ஃபியூஷன் சிப்செட்
* 4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே
* 12 எம்பி பிரைமரி கேமரா, 4K வீடியோ வசதி
* 7 எம்பி செல்ஃபி கேமரா
* கைரேகை ஸ்கேனர்
* வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
32 ஜிபி ஆப்பிள் ஐபோன் 6 ரூ.4,701 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது
ஐபோன் 6 சிறப்பம்சங்கள் -
* 4.7 இன்ச், 750x1334 டிஸ்ப்ளே
* ஐஓஎஸ் 10, ஏ8 பிராசஸர்
* 1 ஜிபி ரேம்
* 8 எம்பி பிரைமரி கேமரா
* 1.2 எம்பி செல்ஃபி கேமரா
* ப்ளூடூத் 4.0
* 1810 எம்ஏஎச் பேட்டரி
ஆப்பிள் ஐபோன் 5s ரூ.4,501 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது
ஐபோன் 5s சிறப்பம்சங்கள் -
* 4.0 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
* ஏ7 சிப்செட், எம்7 மோஷன் கோபிராசஸர்
* 8 எம்பி பிரைமரி கேமரா
* 1.2 எம்பி செல்ஃபி கேமரா
*1560 எம்ஏஎச் பேட்டரி
32 ஜிபி ஆப்பிள் ஐபோன் 6s ரூ.12,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.35,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது
ஐபோன் 6s சிறப்பம்சங்கள் -
* 4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே
* ஏ9 சிப்செட், எம்9 மோஷன் கோபிராசஸர்
* 12 எம்பி பிரைமரி கேமரா
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 1715 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்:
சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 32 ஜிபி கோல்டு ரூ.4,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,490 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் சிறப்பம்சங்கள் -
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
* எக்சைனோஸ் 7870 பிராசஸர்
* 3 ஜிபி ரேம், 3 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 13 எம்பி பிரைமரி கேமரா
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 3300 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ரூ.57,900 முதல்
சாம்சங் கேலக்ஸி S8 சிறப்பம்சங்கள் -
* 5.8 இன்ச் குவாட் எச்டி+ டிஸ்ப்ளே
* எக்சைனோஸ் 8895 பிராசஸர்
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 12 எம்பி பிரைமரி கேமரா
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 3000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் ஆன்5 ரூ.2000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.6,490க்கு விற்பனை செய்யப்படுகின்றது
சாம்சங் ஆன்5 சிறப்பம்சங்கள் -
* 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* எக்சைனோஸ் 3475 பிராசஸர்
* 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 8 எம்பி பிரைமரி கேமரா
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 2600 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் ஜெ5 - 6 ரூ.3,300 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சாம்சங் ஜெ5 - 6 சிறப்பம்சங்கள் -
* 5.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* குவால்காம் எம்எஸ்எம் 8916 பிராசஸர்
* 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 13 எம்பி பிரைமரி கேமரா
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 3100 எம்ஏஎச் பேட்டரி
குறிப்பு:
இங்கு வழங்கப்பட்டுள்ள விலை பட்டியல் பிக் 10 சேல் சலுகையின் கீழ் பிளிப்கார்ட் அறிவித்திருந்தவை ஆகும். இந்த விலை பட்டியல் பிளிப்கார்ட் தரப்பில் எந்நேரத்திலும் மாற்றப்படலாம்.