

சென்னை:
கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் மீன்பிடிக்க கடந்த 18ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்றுள்ளனர். லட்சத்தீவு அருகே தித்திரா தீவுப் பகுதியில் சென்றபோது 2 படகுகள் திடீரென பழுதடைந்துள்ளது.
படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு, குடிநீரின்றி தத்தளித்து வருகின்றனர். இவர்கள் குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 20 மீனவர்கள் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.