நாமக்கலில் ஆஞ்சநேயர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தீயணைப்பு வீரர்கள் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
நாமக்கலில் ஆஞ்சநேயர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை
Published on

நாமக்கல்:

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தீயணைப்பு வீரர்கள் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அறநிலைய நிலையத்துறையின் செயல் அலுலவர் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகையில், தீ தடுப்பை தடுப்பது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் கோவில் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com