

புதுடெல்லி:
பேஸ்புக் தனது மெசேஞ்சர் செயலியில் இன்ஸ்டன்ட் கேம்களை வழங்க துவங்கியுள்ளது. இத்துடன் கடந்த மாதம் நடைபெற்ற பேஸ்புக் F8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட சில அம்சங்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் மெசேஞ்சர் செயலியில் அதிகப்படியான கேம்கள் வழங்கப்படும், இவற்றை டெவலப்பர்கள் பிரத்தியேக அனுபவங்களை வழங்கும் கேம் லீடர்போர்டு, டோர்னமென்ட் மற்றும் விளையாடும் போது வித்தியாசமான மெசேஜ்களை அனுப்ப முடியும். கேம் பாட்களை கொண்டு அதிக சுவாரஸ்யமான கேம்களை விளையாடலாம்.
உலகின் பிரபலமாக அறியப்படும் பல்வேறு கேம்கள் இனி மெசேஞ்சரிலேயே வழங்கப்படும் என்பதால், நம் காண்டாக்ட் லிஸடில் இருப்பவர்களுடன் கேம்களை விளையாட முடியும். மெசேஞ்சரை பயன்படுத்துவோர் வசிக்கும் இடம், பயன்படுத்தும் சாதனம் உள்ளிட்டவற்றிற்கு ஏற்ப அதிகபட்சம் 50 கேம்கள் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள கேம்களை தவிர ஒவ்வொரு வாரமும் புதுப்புது கேம்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இன்ஸ்ட்ன்ட் கேம்ஸ் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் உலகம் முழுக்க ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட இயங்குதளங்களில் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.