தாய்க்கு ஆதரவாக பேசியதால் மகளை கொன்று தந்தை தப்பி ஓட்டம்

தாய்க்கு ஆதரவாக பேசியதால் மகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஷாலு
ஷாலு
Published on

கன்னியாகுமரி:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருவள்ளூரை சேர்ந்தவர் சசி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சைலஜா. இவர்களுக்கு ஷாலு (19) என்ற மகள் இருந்தார். இவர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சசிக்கும் அவரது மனைவி சைலஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து விட்டனர். சைலஜா அதே காம்பவுண்டில் தனியாக வசித்து வந்தார்.

சைலஜா குறித்து சசி ஏதோ கூறி உள்ளார். இதனை ஷாலு ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தனது தாய்க்கு ஆதரவாக பேசி உள்ளார்

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சசி தனது மகள் ஷாலுவின் கழுத்தை பலமாக நெரித்து உள்ளார். இதில் மயங்கிய ஷாலு சம்பவ இடத்திலே இறந்தார்.

அவர் இறந்ததை உறுதி செய்த சசி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த கொலை குறித்து மலப்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மகளை கொன்ற தந்தையை தேடி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com