அருப்புக்கோட்டை அருகே விவசாயி அடித்துக் கொலை

அருப்புக்கோட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே விவசாயி அடித்துக் கொலை
Published on

பாலையம்பட்டி:

அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டிய பட்டி முத்துராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இருவருக்கும் அந்த பகுதியில் அருகருகே தோட்டம் உள்ளது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அழகர்சாமி தனது தோட்டத்தில் குப்பைகளை எரித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகர்சாமியும், அவரது பேரன் தமிழரசனும் சேர்ந்து கட்டையால் கண்ணனை தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த கண்ணனை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி, தமிழரசனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com