ரெயிலில் பெண் குழந்தை இருந்ததால் பாஜகவினர் இறக்கி விடப்பட்டதாக வெளியான வீடியோவால் பரபரப்பு

மும்பையில் ரெயிலில் பயணம் செய்த பாஜக பிரமுகர்கள் உடன் பயணித்த பயணிகள், ரெயிலில் பெண் குழந்தை உள்ளாதால் இறக்கி விட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ரெயிலில் பெண் குழந்தை இருந்ததால் பாஜகவினர் இறக்கி விடப்பட்டதாக வெளியான வீடியோவால் பரபரப்பு
Published on

மும்பை:

காஷ்மீர் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ பகுதியில், மைனர் பெண்ணை கற்பழித்த புகாரில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் பாஜக அரசு மௌனம் காத்தது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், மும்பையில் ரெயிலில் பயணம் செய்த சில பாஜகவினரை, உடன் பயணித்த பயணிகள், தங்களுடன் பெண் குழந்தைகள் பயணம் செய்கிறார்கள், எனவே ரயிலில் இருந்து கீழே இறங்குங்கள், என்று கூறி இறக்கிவிட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதைத் தொடர்ந்து, அந்த வீடியோ போலியானது என்னும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. உண்மையில், பாஜகவினர் பயணச்சீட்டு இல்லாமல் ஏசி பெட்டியில் பயணித்துள்ளனர். அதைப்பற்றி டிக்கெட் பரிசோதகர் கேட்டதற்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களை பயணிகள் ஒன்று சேர்ந்து ரெயிலில் இருந்து இறக்கி விட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com