திருவண்ணாமலையில் போலி பெண் டாக்டர் மீண்டும் கைது

திருவண்ணாமலையில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த போலி பெண் டாக்டர் மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.
ஆனந்தி
ஆனந்தி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள பொன்னுசாமி நகரில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி டாக்டர் ஆனந்தி என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 1000 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ஆனந்தி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆனந்தி வெளி மாவட்டங்களுக்கு சென்று மீண்டும் கருக்கலைப்பு செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து சுகாதார இணை இயக்குனர் சுகந்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆனந்தி கள்ளக்குறிச்சியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த அவர் அங்கிருந்து தப்பி திருவண்ணாமலையில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த ஆனந்தியை திருவண்ணாலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அவர் வெளிமாவட்டங்களில் கருக்கலைப்பு செய்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com