பயனாளிகளின் ரகசியம் கசிவு - பிரிட்டன் பாராளுமன்ற கமிட்டி விசாரணையில் ஜூக்கர்பர்க் ஆஜராக மாட்டார்

பேஸ்புக் பயனாளிகளின் ரகசியங்களை கேம்பிரிட்ஜ் அனலைட்டிக்கா நிறுவனத்துக்கு கசிய விட்டது தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற கமிட்டி முன்னர் ஜூக்கர்பர்க் ஆஜராக மாட்டார் என தெரிகிறது.
பயனாளிகளின் ரகசியம் கசிவு - பிரிட்டன் பாராளுமன்ற கமிட்டி விசாரணையில் ஜூக்கர்பர்க் ஆஜராக மாட்டார்
Published on

சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.

இதேபோல், பிரிட்டன் நாட்டில் பேஸ்புக் பயன்படுத்தி வருபவர்களைப் பற்றிய தகவல்களும் களவாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அல்லது அவரது நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி பாராளுமன்ற விசாரணை கமிட்டியின் முன்னர் ஆஜராகி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கமிட்டியின் விசாரணையில் ஜூக்கர்பர்க் ஆஜராக மாட்டார். அவருக்கு பதிலாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி மைக் ஸ்குரோப்ஃபெர் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com