3 ஆண்டுகளுக்கு பிறகு மு‌ஷரப் நாளை பாகிஸ்தான் திரும்புகிறார்

3 ஆண்டுக்கு பிறகு மு‌ஷரப் நாளை பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
பர்வேஷ் முஷரப்
பர்வேஷ் முஷரப்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (76). இவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

‘அமிலாய்டோசிஸ்’ என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட அவர் துபாயில் தங்கியுள்ளார். கடந்த 2016 மார்ச் மாதம் முதல் அங்கேயே தங்கியிருந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் ஆட்சியில் இருந்த போது 2007-ம் ஆண்டில் அரசியல் சட்டத்தை முடக்கி வைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

2014-ம் ஆண்டு இது தேச துரோக வழக்காக இவர் மீது பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் 3 ஆண்டுக்கு பிறகு இவர் நாளை(6-ந்தேதி) பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு திரும்பும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com