உத்தரகாண்ட்: முன்னாள் முதல்-மந்திரி மீது பைக் மோதியது - காயமின்றி தப்பினார்

உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி மீது பைக் மோதியதில், அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
உத்தரகாண்ட்: முன்னாள் முதல்-மந்திரி மீது பைக் மோதியது - காயமின்றி தப்பினார்
Published on

டேராடூன்:

உத்தராகண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் ராஜ்பூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகில் செல்போனில் பேசியபடி நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராத விதமாக தனது கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட ஹரிஷ் ராவத்மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய அவர், உடனே சமாளித்துக் கொண்டார். திடீரென நடந்த இந்த விபத்தில், ஹரிஷ் ராவத் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தப்பினார்.

முன்னாள் முதல்-மந்திரி மீது பைக் மோதியதை அறிந்து, அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். ஆனால், முதல்-மந்திரி தலையிட்டு சமாதானம் செய்ததன் பேரில், பைக்கில் வந்தவர் பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார் என ஹரிஷ் ராவத்தின் செய்தி தொடர்பாளர் சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com