உ.பி.யில் துணிகரம்: சட்டசபை அருகே முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் சுட்டுக் கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்டசபை அருகில் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.யில் துணிகரம்: சட்டசபை அருகே முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் சுட்டுக் கொலை
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்டசபை அருகில் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் டமாயரியாகஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பிரேம் பிரகாஷ் திவாரி. இவரது ஒரே மகன்

வைபவ் (36).

இந்நிலையில், நேற்று இரவு வைபவ் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு பரிச்சயமான நபர் வந்து அழைத்துள்ளார். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் வைபவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் குண்டுகள் பாய்ந்து வைபவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வைபவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சட்டசபை நடந்து வரும் நிலையில், சட்டசபை அருகிலேயே முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ மகன் சுட்டு கொல்லப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com