

அர்செனல் தனது சொந்த மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மான்செஸ்டர் சிட்டி அணியின் பெர்னாடோ சில்வா 15-வது நிமிடத்திலும், டேவிட் சில்வா 38-வது நிமிடத்திலும், லெரோய் சானே 33-வது நிமிடத்தில் கோல் அடித்தனர்.
முதல் பாதி நேரத்தில் மான்செஸ்டர் சிட்டி 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்காததால் மான்செஸ்டர் சிட்டி 3-0 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி 28 போட்டிகளில் 24-ல் வெற்றி பெற்று 75 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 59 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையில் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளது.