திருமழிசையில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டுக்கு அடிமையானவரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமழிசையில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

செவ்வாப்பேட்டை:

செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பிராங்ளின் (வயது 22) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

திருமழிசை சாண்ட்ரோ சிட்டியில் உடன் படிக்கும் நண்பர்கள் 3 பேருடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவரது சொந்த ஊரு ஒரத்தநாடு ஆகும்.

தீபாவளி பண்டிகையையொட்டி பிராங்கிளினுடன் தங்கி இருந்த நண்பர்கள் 3 பேர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். வீட்டில் பிராங்ளின் மட்டும் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் பிராங்ளின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்-இன்ஸ் பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் பிராங்ளின் பிணமாக கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

தற்கொலை செய்து கொண்ட பிராங்ளின் அடிக்கடி செல்போனில் ‘கேம்’ விளையாடி வந்து உள்ளார். அவர் நீலத்திமிங்கலம் விளையாட்டுக்கு அடிமையானவரா? என்று அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com