

திருவள்ளூர்:
திருத்தணி ரெயில் நிலையத்தில் இன்று காலை பயணிகள் ஏராளமானோர் சென்னை, திருவள்ளூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.
ஆனால் டிக்கெட் கவுண்டரில் இருந்த ஊழியர்கள் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கவில்லை. எனவே கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்சனையாக இருக்கும் என்று பயணிகள் நினைத்தனர்.
ஆனால் டிக்கெட் கவுண்டரில் உள்ள ஊழியர்கள் பிறந்த நாள் கொண்டாடி உற்சாக குரல் எழுப்பினர். இதைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
டிக்கெட் எடுக்க முடியாததால் திருப்பதியிலிருந்து சென்னை வரை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதற்காக நின்றிருந்த பயணிகள் வண்டியை தவறவிட்டனர்.
பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியை செய்யாமல் பணி நேரத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டதால் தாங்கள் செல்ல வேண்டிய வண்டியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.