ஊதிய உயர்வு வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊதிய உயர்வு வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நாமக்கல்:

நாமக்கல்லில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மத்திய மின்வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்திற்கு உதவி கணக்கு அலுவலர் ராஜேந்தின் தலைமை  வகித்தார். 

நாமக்கல் சிறப்பு நிலை திட்டத்தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில்  2015ல் இருந்து வழங்கவேண்டிய ஊதிய உயர்வுத்தொகையை நிலுவை தொகையுடன் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

முடிவில் முதல்நிலை முகவர் சுந்தர்ராஜன் நன்றி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com