வாசுதேவநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரத்தை அடுத்த சரவணாபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 53). வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று அருளாச்சி கிராமத்தில் கன்னிமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

மதியம் 12 மணி அளவில் வீட்டின் மொட்டை மாடியில் நின்று பெயிண்ட் அடித்தபோது, அங்கு அவரது தலைக்கு மேல் காணப்பட்ட மின்ஒயரில் எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்–இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மணிக்கு அமுதா (45) என்ற மனைவியும், விக்னேஷ், பிரபாகரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com